வருகிற 1-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 3.1 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் இதே உயர அளவில் மற்றொரு வளிமண்டல சுழற்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால், இன்று கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். மேலும், தமிழகத்தின் பல பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் மே 30-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 31 மற்றும் ஜூன் 1-ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். மேலும், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

Related News

Latest News