ஒரே இரவில் 76 ரவுடிகள் கூண்டோடு கைது! ஆட்டத்தை தொடங்கிய முதல்வர்! சென்னையில் அதிரடி ‘ஆபரேஷன்’!

தலைநகர் சென்னையை அதிர வைக்கும் வகையில், நேற்றிரவு காவல்துறையினர் நடத்திய ஒரு பிரம்மாண்ட ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ மூலம் 76 ரவுடிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் ‘ஜீரோ சகிப்புத்தன்மை’ காட்டப்படும் என்று விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாநகரக் காவல்துறை இந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

குறிப்பாகத் தி.நகர், அடையாறு மற்றும் புளியந்தோப்பு ஆகிய முக்கிய காவல் மாவட்டங்களில் நள்ளிரவில் சினிமா பாணியில் இந்தத் தேடுதல் வேட்டை அரங்கேறியுள்ளது. நேற்றிரவு தொடங்கிய இந்தத் திடீர் சோதனையில், ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்போர், ஜாமீன் பெற்றுவிட்டுத் தலைமறைவாக இருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ரகசியமாக ஈடுபட்டு வந்த சமூக விரோதிகளைப் போலீசார் குறிவைத்துத் தூக்கினர்.

இதில் தி.நகர் காவல் மாவட்டத்தில் மட்டும் 18 ரவுடிகளும், அடையாறில் 16 ரவுடிகளும், புளியந்தோப்பு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ரவுடிகளும் எனச் சென்னை முழுவதும் மொத்தம் 76 பேர் ஒரே இரவில் கம்பி எண்ண வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்க நினைக்கும் எவரும் தப்ப முடியாது என்பதற்கு இந்த ‘மிட்நைட் ஆபரேஷன்’ ஒரு சான்றாக அமைந்துள்ளது.

முதலமைச்சர் விஜய் தனது கடந்த சில உரைகளில், போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது ‘குண்டர் சட்டம்’ பாயும் என்றும், லஞ்சம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வார்த்தைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாகப் போலீசாருக்குப் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த பல ‘ஏ’ பிளஸ் ரவுடிகள் இந்தச் சோதனையில் சிக்கியிருப்பது சென்னை மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிரடி வேட்டை இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை என்றும், இனி வரும் நாட்களிலும் சென்னையின் ஒவ்வொரு மூலையிலும் இத்தகைய சோதனைகள் தொடரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மக்களின் பாதுகாப்புதான் இந்த அரசின் முதல் முன்னுரிமை” என்று முதலமைச்சர் விஜய் கூறி வரும் நிலையில், ஒரே இரவில் 76 ரவுடிகளைத் தட்டித் தூக்கியுள்ள சென்னை போலீசின் இந்தச் செயல், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. கோட்டையில் ஒரு புதிய நிர்வாகத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கைகள், சென்னையை ஒரு பாதுகாப்பான நகரமாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Related News

Latest News