தமிழக சட்டசபையில் நடைபெற்று வரும் நம்பிக்கை குரல் வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை அறிவித்துள்ளன.
சி.பி.எம். சட்டமன்றக்குழு தலைவர் செல்லசுவாமி பேசுகையில், “த.வெ.க. தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களுக்காக திறம்பட செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சட்டமன்றக்குழு தலைவர் வன்னிஅரசு, த.வெ.க. அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார்.
இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலா 2 உறுப்பினர்கள் என மொத்தம் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
