பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் முதலமைச்சர் விஜய். நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் அரசியல் பரபரப்பு அதிகரித்தது. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார் பேசுகையில், “தமிழக வெற்றிக்கழக அரசுக்கு காங்கிரசின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவு அளிக்கிறார்கள்” என்றார்.
மேலும், வெறுப்பு அரசியல் மற்றும் மதத்தின் பெயரில் மக்களை பிரிக்கும் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெண்கள் பாதுகாப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் மற்றும் மதுபானக்கடைகளை மூடும் அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்ததாக கூறினார். தொடர்ந்து த.வெ.க. அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
