தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையைப் படைத்து, 108 இடங்களுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில், ஒரு சுவாரஸ்யமான பெயர்ப் பொருத்தம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கட்சியின் தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் பெயரைத் தாங்கிய 10 உறுப்பினர்கள் (11 தொகுதிகள்) தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர். தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலேயே ஒரே பெயரைக் கொண்ட இத்தனை உறுப்பினர்கள் ஒரே கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்று அரசியல் ஆர்வலர்கள் வியப்புடன் பார்க்கின்றனர்.
‘விஜய்’ பெயர் கொண்ட தவெக எம்.எல்.ஏ-க்கள்:
1.S. Vijayakumar — கும்மிடிப்பூண்டி
2.M.L. Vijayprabhu — மாதவரம்
3.C. Joseph Vijay — பெரம்பூர் & திருச்சிராப்பள்ளி கிழக்கு (இரட்டை வெற்றி)
4.K.V. Vijay Damu — ராயபுரம்
5.B. Vijayaraj — திருப்போரூர்
6.Vijay Tamilan Parthiban. A — சேலம் தெற்கு
7.M. Vijay Balaji — ஈரோடு கிழக்கு
8.Vijayakumar (a) Navalpattu S. Viji — திருவெறும்பூர்
9.R. Vijaysaravanan — தஞ்சாவூர்
10.Vijay. M — உசிலம்பட்டி
மொத்தம் 10 தனித்தனி உறுப்பினர்கள், 11 தொகுதிகள்.
கட்சியின் தலைவரான சி. ஜோசப் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது அரசியல் பலத்தை நிரூபித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, மாதவரம், ராயபுரம், திருப்போரூர், சேலம் தெற்கு, ஈரோடு கிழக்கு, திருவெறும்பூர், தஞ்சாவூர், உசிலம்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் “விஜய்” பெயர் கொண்ட வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தபோது, ஏறக்குறைய 25க்கும் மேற்பட்ட “விஜய்” என்ற பெயர் கொண்டவர்களுக்கு தவெக வாய்ப்பளித்திருந்தது. அதில் இப்போது 10 பேர் மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைத்துள்ளனர்.
சட்டமன்றத்தில் சபாநாயகர் “உறுப்பினர் விஜய் அவர்கள் பேசலாம்” என்று அழைக்கும்போது, ஒரே நேரத்தில் பலர் திரும்பிப் பார்க்கும் சுவாரஸ்யமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
108 இடங்களில் வெற்றி பெற்று திராவிடக் கோட்டையைத் தகர்த்த தமிழக வெற்றிக் கழகத்தில், சுமார் 9.25 சதவீதம் உறுப்பினர்கள் தலைவரின் பெயரையே பகிர்ந்துகொள்வது அக்கட்சிக்குள் இருக்கும் ஒரு விசித்திரமான ஒற்றுமையைக் காட்டுகிறது.
முதல்வர் விஜய் தலைமையில் இந்த பத்து விஜய்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக சட்டமன்றத்தில் எப்படித் தங்களது குரலை ஒலிக்கப் போகின்றனர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
