சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து 3 நாட்கள் முடிந்து விட்டன. ஆனால் இன்னும் தவெக தலைவர் விஜய்யால் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்க முடியவில்லை. தவெக கைவசம் 108 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருப்பதால் பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்டது. இதையடுத்து காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி, விஜய்க்கு 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவு அளித்துள்ளது.
என்றாலும் ஆட்சியமைக்க இன்னும் 6 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால் விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் விஜய் செய்த தவறு தான் அவரின் பதவியேற்பு தள்ளிப் போவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது நாங்கள் தான் தனிப்பெரும் கட்சி எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள் என, தமிழ்நாடு ஆளுநரிடம் தவெக கடிதம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கூட்டணி எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கணக்கில் காட்டி, ஆட்சி அமைக்க உரிமை கேட்டு இருக்கிறார்கள்
இங்கு தான் சிக்கல் ஏற்பட்டு விட்டது. கூட்டணி என்று சொல்கிறீர்கள் அப்படி என்றால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டுங்கள் என ஆளுநர் சொல்லிவிட்டார். ஒன்று தேவையான பலத்தை பெறும் வரை பொறுமை காத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தங்களை மட்டுமே முன்னிறுத்தி உரிமை கட்டி இருக்க வேண்டும். இரண்டையும் செய்யாததால் தற்போது விஜய் பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக கட்சி தவெகவிற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது. நேரடி எதிரியாக கட்டமைத்ததால், திமுகவிடமும் விஜய்யால் ஆதரவு கோர முடியாது. இதனால் திமுக கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே விஜய்யால் இந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க முடியும், என்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
