திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடப் போவதாக, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நடந்து முடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அங்கு தவெக கட்சியின் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் சகாயம் அல்லது லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஒரு கிறிஸ்தவர் என்பதால், சகாயம் ஐஏஎஸ் இங்கே போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதியில் போட்டியிடலாம் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கட்சி வேறுபாடுகளை தாண்டி பொதுமக்கள் பலரும் ஸ்டாலினின் தோல்விக்கு வருத்தம் தெரிவித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒருவேளை அவர் திருச்சி கிழக்கில் நின்றால் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
