திமுகவுக்கு டாடா? திருமா எடுத்த முக்கிய முடிவு! விசிக வெளியிட்ட முக்கிய அறிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கியுள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதது மக்கள் அளித்துள்ள மிகவும் நுட்பமான அரசியல் தீர்ப்பாகும் என்றும், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகின்றனர் என்பதற்கான வெளிப்பாடாக இதை பார்க்க வேண்டும் என்றும் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


தேர்தல் முடிவுகளின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய தனிக்கட்சியாக உருவெடுத்துள்ளது. தொடர்ந்து, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 73 இடங்களிலும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னரற்ற கழகம் கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.


இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமாவளவன், கடந்த பல ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தைகள் முன்வைத்த கூட்டணி ஆட்சிக்கான அரசியல் கருத்தை தற்போது மக்கள் தங்களது வாக்கின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொங்கு சட்டசபை உருவாகும் நிலை இருப்பது அதற்கான தெளிவான சான்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், மதச்சார்பின்மையை பாதுகாப்பதே தங்களது தேர்தல் நோக்கம் எனவும், அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் தகுந்த அரசியல் பாடம் புகட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக பாஜக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தோல்வி கண்டிருப்பது, தமிழ்நாட்டில் வலதுசாரி மற்றும் மதவாத அரசியலுக்கு மக்கள் இடமளிக்க விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

Latest News