தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது.
தற்போதைய முன்னிலை நிலவரங்களின்படி, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்திலும், திமுக கூட்டணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இது மாநில அரசியல் நிலவரத்தில் பெரிய மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.
இதுவரை மொத்தமாக சுமார் 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில் த.வெ.க. மட்டும் 50 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சி ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது. கட்சி அலுவலகங்களுக்கு வெளியே தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் தற்போது 112 இடங்களில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது. இதனால், ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அந்தக் கட்சிக்கு அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. அதே நேரத்தில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் சூழல் பரபரப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தீர்ப்பு எந்தக் கட்சிக்கு முழுமையான பெரும்பான்மையை அளிக்கும் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெளிவாகும்.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் அவரது குடும்பத்தினர் தொடர் முன்னிலையை கொண்டாடி வருவதை இணைத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
