கொளத்தூரில் MK ஸ்டாலின் பின்னடைவு…

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வழக்கம்போல் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது.

தற்போதைய முன்னிலை நிலவரங்களின்படி, த.வெ.க. கட்சி பல தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்திலும், திமுக கூட்டணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி மொத்தம் 234 தொகுதிகளில் த.வெ.க. 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 81 இடங்களிலும், திமுக கூட்டணி 51 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. எனினும், இதுவரை எந்தக் கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான தொகுதிகளில் சில அதிர்ச்சி நிலவரங்களும் வெளியாகியுள்ளன. கொளத்தூர் தொகுதியில் 6வது சுற்று எண்ணிக்கையின் முடிவில் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு த.வெ.க. வேட்பாளர் பாபு 19,804 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மு.க. ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

மேலும், வில்லிவாக்கம் தொகுதியிலும் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகித்து வருகிறார். இதனால், மாநில அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related News

Latest News