கோடை கூட்ட நெரிசல்: திருச்சி TO தூத்துக்குடி சிறப்பு ரெயில் அறிவிப்பு… நோட் பண்ணிக்கோங்க…

கோடை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தெற்கு ரெயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருச்சி – பெங்களூரு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, திருச்சியில் இருந்து 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06007), அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து அதே தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06008), இரவு 10.30 மணிக்கு திருச்சி வந்தடையும்.

மேலும், தூத்துக்குடி – தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06018) மே 4 முதல் 8ஆம் தேதி வரை இயக்கப்படும். அதேபோல், தாம்பரம் – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரெயில் (வண்டி எண் 06017) மே 5 முதல் 9ஆம் தேதி வரை சேவையில் இருக்கும்.

கோடை விடுமுறை காரணமாக அதிகரிக்கும் பயணிகள் தேவை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் சிரமமின்றி தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் முன்பதிவு செய்து இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News