இந்திய பிரதமராக யாருக்கு ஆதரவு? AI அளித்த பதிலால் புதிய சர்ச்சை

எலான் மஸ்க்கின் ‘Grok’ செயற்கை நுண்ணறிவு (AI), இந்திய அரசியல் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. “நீங்கள் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு க்ராக் அளித்த பதில், கடந்த கால சர்ச்சைகளை மீண்டும் கிளப்பியுள்ளது.

AI அளித்த பதிலில் “நான் ஒரு AI என்பதால் எனக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தால் நான் நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுப்பேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பது போன்ற காரணங்களால் அவரது தலைமை நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது எனக் கருதுகிறேன் என்று கூறியுள்ளது .

தனது விளக்கத்தை மேலும் தெளிவுபடுத்திய க்ராக், தான் எந்தக் கட்சியையும் சார்ந்து இயங்குவதில்லை என்றும், பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் மோடியின் திட்டங்கள் வலுவான சாதனைகளைக் கொண்டுள்ளதால் அவரைத் தீவிரமாகப் பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளது.

தற்போது பிரதமர் மோடிக்கு ஆதரவாகப் பேசும் இதே ‘Grok’ AI, சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு முற்றிலும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ராகுல் காந்தியை ‘அதிக நேர்மையானவர்’ என்றும், ‘சிறந்த முறையான கல்வி பெற்றவர்’ என்றும் புகழ்ந்து தள்ளியது.அதே சமயம் பிரதமர் மோடி மீது சில விமர்சனங்களையும் முன்வைத்தது. இந்த முரண்பாடான பதில்கள் அப்போது பெரிய அரசியல் புயலைக் கிளப்பியதோடு, AI அமைப்புகளின் நடுநிலைமை குறித்து அரசு விசாரணைகளுக்கும் வழிவகுத்தது

தற்போது Grok ன் பதில்கள் வைரலாகி வருவதைக் கண்டு, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது வழக்கமான பாணியில் ‘சிரிக்கும் எமோஜி’யுடன் இதனை நிராகரித்துள்ளார்.

Related News

Latest News