3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல வங்கி

வங்கித்துறையில் ஆட்டோமேஷன் என்பது நீண்ட காலமாக நடந்து வருகிறது, ஏடிஎம் மெஷின் வந்த பின்பு வங்கியில் காசாளருக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது, குறிப்பாக யூபிஐ மூலம் அனைத்து பேமெண்ட்களுக்கும் செய்ய முடியும் என்பதால் காசாளருக்கான வேலை குறைந்து வருகிறது

இப்படி பணம் வித்டிரா செய்வது முதல் வங்கியில் கடன் வாங்குவது வரையில் ஆன்லைன் வாயிலாக செய்யும் முறை தற்போது வங்கியில் டிஜிட்டல் சேவையாக மாறியுள்ளது. இந்த ஏஐ காலத்தில் இன்னும் வேகமான மாற்றங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் வங்கித்துறையில் ஊழியர்கள் தேவை என்பது மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது.

ஆக்சிஸ் வங்கி 2025-26 நிதியாண்டில் தனது ஊழியர் எண்ணிக்கையை சுமார் 3000 குறைத்துள்ளதாக
ஆக்சிஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் கூறியுள்ளார்.வங்கியின் நீண்டகால தொழில்நுட்ப முதலீட்டு உத்தியின் வாயிலாக குறைக்கப்பட்டது என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.. இந்தக் குறைப்பு எந்த ஒரு துறைக்கு மட்டும் குறிவைக்கப்படவில்லை. வங்கியின் பல்வேறு பிரிவுகளிலும் இயற்கையாகவே ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் மனித தலையீடு தேவையில்லாத இடத்தில் இருந்து ஊழயர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

IT டிஜிட்டல் சேவை துறையில் ஏஐ வாயிலாகவும், ஆட்டோமேஷன் வாயிலாகவும் அதிகப்படியான பணிநீக்கம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வங்கித்துறையிலும் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஊழியர்கள் குறைப்பு நடந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.ஆக்சிஸ் வங்கியின் இந்த நடவடிக்கை, வங்கித் துறையில் தொழில்நுட்ப மாற்றம் எப்படி ஊழியர் அமைப்பை மாற்றி வருகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இதேவேளையில் ஏஐ சேவைகளை வங்கியின் ஒவ்வொரு நிர்வாக கட்டத்திலும் பயன்படுத்தினால் இன்னும் அதிகமான மறுசீரமைப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நட்சத்திர ஏரியில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த துர்கா ஸ்டாலின்… சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகளை தூக்கி கொஞ்சி புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

Related News

Latest News