இந்தியாவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு., காத்திருக்கும் அடுத்த ஆபத்து

இந்தியாவில் கடந்த 15 நாட்களில் மட்டும் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களின் விலை 200% முதல் 300% வரை அதிகரித்துள்ளதாக இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்க (HDMA ) மாநில தலைவர் ராஜேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளின் விலை, கிலோவிற்கு ரூ.250-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்காக மக்கள் தினசரி பயன்படுத்தும் ஜெனரிக் மருந்துகளின் விலை கணிசமாக உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் தட்டுப்பாடும் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. மருந்துத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியைத் தவிர்க்க மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும் என இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related News

Latest News