கவின் ஆணவக் கொலை: முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு…

ஐடி ஊழியர் கவின் கொலை சம்பவம் ஓராண்டு நினைவு தினம். அமைச்சர் வன்னியரசு வீட்டிற்கு சென்று நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த வருடம் இதே நாளில் மாற்று சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த கவின் என்ற ஐடி ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை சிபிசிஐடி வசம் நடந்து வந்தது.

இதற்கிடையில் கடந்த மே மாதம் 29ஆம் தேதி இந்த கொலை சம்பவத்தில் அந்த பெண்ணின் தாயார் எஸ்ஐ கிருஷ்ணகுமாரியும் தொடர்பு இருந்ததாக கூறி அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் அவரது வீட்டில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் விசிக நிர்வாகிகள் நேரில் வருகை தந்து கவின் தாய் மற்றும் தந்தையருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து புகைப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது கவினின் தாய் கவினின் புகைப்படத்தை பார்த்து கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுத காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

Related News

Latest News