தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்குத் நீதி கோரி, மாணவியின் உடலை பெற மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில், சாயல்குடி சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்ற நபரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான முனீஸ்வரனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, நள்ளிரவில் திடீரென அவருக்கு வயிறு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதை எடுத்து தர்ம முனீஸ்வரன் எட்டையாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து போலீசார் தர்ம முனீஸ்வரனை மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
