பெண்களை அவமதிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசியதை தொடந்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு விவாதபொருளாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நடிகை நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் எழுந்ததால் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசியதாவது:-
“தற்போது திமுக நூறு ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. மேலும் சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்டுவது என பெண்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.” என்றார்.
அவரது இந்த பேச்சு கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில், அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
