‘எனக்கு நயன்தாரா வேண்டும்’ : சி வி சண்முகம் சர்ச்சை பேச்சு

தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய சி.வி சண்முகம் “அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். எனக்கு நயன்தாரா வேண்டும் முதல்வர் நிறைவேற்றுவாரா? நயன்தாராவை கல்யாணம் செய்து வைக்க சொல்லி கேட்டால் முதல்வர் நிறைவேற்றுவாரா? என பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News