திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 72 தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் 72 நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிரசாதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த பங்கஜ் என்பவர் அணிந்திருந்த பேக்கில் ரூ.35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
இதேபோல் குமரன் சாலையில் வாகன தணிக்கையின் போது பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது வாகனத்தை சோதனை செய்தனர். ஊடகம் என ஒட்டப்பட்டு இருந்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
