கரூர் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் ஏற்கெனவே இரு முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 3ஆவது முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடைபெறுகிறது.
இந்த நிலையில், சி.பி.ஐ. விசாரணையை இனி சென்னை அல்லது தமிழ்நாட்டின் வேறு ஏதாவது ஒரு இடத்தில் நடத்த வேண்டும் என்றும் விஜய் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 14-ஆம் தேதி இந்த கடிதத்தை விஜய் எழுதியுள்ளார். சி.பி.ஐ. மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு விஜய் தரப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
