வேளச்சேரி – பரங்கிமலை இடையே நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவை இன்று அதிகாலை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வழித்தடத்தில் கடற்கரை – பரங்கிமலை இரு மாா்க்கத்திலும் 86 ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் கடற்கரை – வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 4 ரயில்கள், பரங்கிமலை – வேளச்சேரி இடையே இரு மாா்க்கத்திலும் 6 ரயில்கள் இயக்கப்படும். என மொத்தம் 96 ரயில்கள் இவ்வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.
ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் தற்போது ரயில்கள் நிற்காது எனவும் விரைவில் இச்சேவை முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
