டெல்லியிலிருந்து கோவாவிற்கு சென்ற விமானத்தில் பயணித்த ஒருவர் விமானக் கழிப்பறையில் பீடி புகைத்ததாகக் கூறி அவர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற பயணி சனிக்கிழமை டெல்லியிலிருந்து கோவாவிற்கு ஆகாசா ஏர் விமானத்தில் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின் போது அவர் விமானக் கழிப்பறைக்குள் சென்று பீடி புகைத்ததாக விமான நிறுவனம் புகார் அளித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கோவாவில் உள்ள மோபா விமான நிலைய காவல் நிலையத்தில் அந்தப் பயணியிடம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
