சிவகங்கையில் சிகிச்சையில் இருந்த கைதி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் ஜெயபாண்டி, அழகர் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டி விட்டு தப்பியது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதில் ஆகாசை கைது செய்து அழைத்து வந்த போது மேலப்பசலை பாலத்தில் இருந்து குதித்ததால், கால் முறிந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த ஆகாஷ் நள்ளிரவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

Related News

Latest News