ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அனுமதி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலத்தில், ஏர்செல்–மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீட்டு வாரியத்தின் அனுமதி அளிப்பதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகள் பதிவு செய்தது.

இந்த வழக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன்பே அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது. அந்த இரு குற்றப்பத்திரிகைகளிலும் ப. சிதம்பரம் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளில் வழக்கு தொடர முன் உரிய அனுமதி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில், ப. சிதம்பரம் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை கடந்த 10ஆம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்றது. அந்த அனுமதி உத்தரவை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அமலாக்கத்துறை, ப. சிதம்பரம் எதிராக விரைவில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Related News

Latest News