நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
