Sunday, February 22, 2026

உட்கார்ந்து யோசிப்பாங்களோ., நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்

பீகார் மாநிலத்தில், மதுபானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், சட்டவிரோதமாக கடத்திச்சென்று மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நாற்காலிகளை அடுக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்றவரை சோதனை செய்ததில், அவர் மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

அதில் நாற்காலியின் அமரும் பாகத்தை வெட்டி எடுத்து, ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிவைத்து அதன் நடுவில் மது பாட்டில்களைக் கடத்திச் சென்றுள்ளார். அதனுள் ஏராளமான மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Related News

Latest News

error: Content is protected !!