உணவில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவை மூளையில் வீக்கத்தை அதிகரிக்கலாம்.
இது நரம்பியல் தொடர்புகளை பாதித்து, அறிவாற்றல் செயல்பாடுகளை மெதுவாக்கும். தவறான உணவுப் பழக்கங்கள் பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநல பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உட்கார்ந்த வாழ்க்கை முறை
உடல் உழைப்பு குறைவான வாழ்க்கை முறை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய நரம்பணுக்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. உடற்பயிற்சி இல்லாமை மனநிலை மாற்றம், நினைவாற்றல் குறைவு, நீண்டகாலத்தில் டிமென்ஷியா அபாயம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தீர்வு : நடைபயிற்சி, நீச்சல், யோகா போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அவசியம்.
அதிக திரை நேரம்
செல்போன், கணினி போன்ற சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவது மூளை ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது கவனக்குறைவு, தூக்கக் கோளாறு, நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு இது உணர்ச்சி பாதிப்பை உண்டாக்கலாம்.
தீர்வு : திரை நேரத்தை கட்டுப்படுத்த 20-20-20 விதியை பின்பற்றலாம். அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 விநாடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும்.
நாள்பட்ட மன அழுத்தம்
நீண்டகால மன அழுத்தம் உடலில் கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது. அதிக கார்டிசோல் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியை பாதித்து, கற்றல் மற்றும் நினைவாற்றலை குறைக்கலாம். இது நினைவிழப்பு, கவனக்குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தீர்வு : மன அழுத்தத்தை குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாச பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். ஓய்வு தரும் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் உதவும்.
தூக்கமின்மை
தொடர்ச்சியான தூக்கமின்மை மூளை செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும். ஆழ்ந்த உறக்கத்தின் போது மூளை நச்சுகளை வெளியேற்றி, நினைவுகளை ஒழுங்குபடுத்துகிறது. நீண்டகால தூக்கமின்மை அறிவாற்றல் குறைபாடு மற்றும் அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களுக்கு காரணமாக இருக்கலாம்.
தீர்வு : தினமும் 7 முதல் 9 மணி நேரம் உறங்குவது அவசியம். ஒழுங்கையான தூக்க அட்டவணையை பின்பற்றுவது மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
மூளையின் ஆரோக்கியம் மேம்பட என்ன செய்யலாம்?
சரியான உணவு, போதுமான உடற்பயிற்சி, கட்டுப்படுத்தப்பட்ட திரை நேரம், மனஅழுத்த மேலாண்மை மற்றும் நல்ல தூக்கம் ஆகியவை மூளை ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்கும்.
பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
