Saturday, February 21, 2026

‘விஜய் செய்தியாளர்களை சந்திக்க தயாராக உள்ளார்’ – ஆதவ் அர்ஜுனா பேச்சு

கடலூர் நகரில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.

இதையடுத்து, இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “ஒரு துண்டு பேப்பர் கூட இல்லாமல், எங்கள் தலைவர் விஜய் செய்தியாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராக உள்ளார். அதேபோல் முதலவரும் தயாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “தவெக தலைவர் விஜய் வருவார், நீங்கள் வருங்கள், மக்கள் முன் திறந்தவெளியில் விவாதிப்போம்” எனவும் அழைப்பு விடுத்தார்.

மக்கள் முன்னிலையில் நேரடி அரசியல் விவாதம் நடைபெறுமா? முதலவர் இந்த சவாலுக்கு பதிலளிப்பாரா? என்பதையே அரசியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Related News

Latest News