Saturday, February 14, 2026

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர்

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கிடையே அரசியல் கட்சியினரும் ஒரு கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் அதிமுக தலைமையுடனும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நிலோபர் கபில் இருந்த காலத்தில், கோடிக்கணக்கில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினரில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில், நிலோபர் கபில் இன்று திமுகவில் இணைய உள்ளார்.

Related News

Latest News