Friday, February 13, 2026

ஜாமினில் வந்த ரவுடியுடன் ஓட்டம்பிடித்த பெண் காவலர்., நின்று போன திருமணம்..!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். அவர் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த அங்கித் சவுகான் என்ற நபர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருந்ததால், அவர் ஒரு பிரபல ரவுடியாக அறியப்பட்டார். இவர் மதுபான கடையில் நடந்த திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சந்தியாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். முஜஃபர்நகர் பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி அதுல் சர்மாவுடன் சந்தியாவின் நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்ததால், இரு குடும்பங்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கி, திருமண ஏற்பாடுகளை உற்சாகமாக செய்து வந்தனர்.

இதற்கிடையில், சிறையில் இருந்த அங்கித் சவுகான் ஜாமினில் வெளியே வந்தார். இதை அறிந்த சந்தியா, தனது காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார். கடந்த சனிக்கிழமை, சந்தியாவும் அங்கித் சவுகானும் வீட்டை விட்டு வெளியேறினர். மகள் வீட்டில் இல்லாததை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து, பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, சந்தியாவின் செல்போனை தொடர்பு கொள்ள முயன்றபோது அது அணைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, சந்தியா தனது காதலனுடன் பக்சர் நகரில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அந்த இடத்தை அடைந்து சந்தியாவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், அங்கித் சவுகானுக்காக தானாகவே வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சந்தியா தெரிவித்தார். அங்கித் சவுகான் மீது பல வழக்குகள் இருப்பதால், அவரை விட்டு பிரிந்து வருமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், அவர் மீது வழக்குகள் இருந்தாலும் தாம் அவரையே காதலிக்கிறேன், அவரையே திருமணம் செய்து கொள்வேன், அவரை விட்டு பிரிய முடியாது என்று சந்தியா உறுதியாக கூறினார்.இதன் விளைவாக, சந்தியாவின் திருமணம் நிறுத்தப்பட்டது.

Related News

Latest News