முதல்வர் விஜய் பிறந்தநாள்; தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர்…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி.ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாநிலம் முழுவதும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மிக பிரம்மாண்டமான முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான அமைச்சர் ஸ்ரீநாத், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார்.

Related News

Latest News