விசிகவினரின் வாகனத்தின் மீது ஏறி ரகளை செய்த பாமக இளைஞர்கள் கைது

அரியலூரில் விசிக தொண்டர்களின் வாகனத்தை மறித்து ரகளை செய்த பாமக இளைஞர்களின் வீடியோ
வைரலாகி வருகிறது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மறைந்த முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ குரு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, பாமக இளைஞர்கள் சிலர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் காரை வழிமறித்து கார் பேனட்டில் ஏறி பாமக கொடியை காட்டி ரகளை செய்தனர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், விக்னேஷ், பரத், கல்யாணக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.

Related News

Latest News