Monday, February 2, 2026

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எரிபொருள் விலைகளை மறுஆய்வு செய்து மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில், வணிக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து, தற்போது ரூ.1,899.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு, வணிக சிலிண்டர் விலை தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதே நேரத்தில், பொதுமக்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் இதன் விலை ரூ.868 ஆக உள்ளது.

Related News

Latest News