Wednesday, February 4, 2026

அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் திமுகவில் இணைந்தார்

அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவருடன் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவிடம் கூட்டணி அமைக்க வேண்டாம் என கூறியதை டிடிவி தினகரன் ஏற்கவில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி திமுகவில் இணைந்துள்ளோம்.

தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையில் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.

Related News

Latest News