ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணையப்போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், அரசியலில் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பாதவது :
”நேற்றைய தினம் திமுகவில் இணையப்போவதாக கூறினேன். அதற்கு ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்? என்று கேட்டார். என்னுடைய மகளோ, இது அசிங்கமாக இல்லையாப்பா என்று கேட்டாள். இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால், பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
