Wednesday, February 4, 2026

‘கூட்டணி பேச எனக்கு மட்டுமே உரிமை உள்ளது’ – ராமதாஸ்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை புரிந்தார். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இரு தலைவர்களும் இறுதி செய்தனர். இதையடுத்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. – பா.ம.க. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், பாமகவுக்கு ராமதாஸ் மட்டுமே தலைவர் என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சட்ட விரோதம் என பாமக தலைவர் ராமதாஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்ட விரோதம். கட்சி விதிப்படி ராமதாஸ் மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உள்ளவர் என ராமதாஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related News

Latest News