‘வாலி’, ‘குஷி’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது பல படங்களில் நடிகராக வளம் வருகிறார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
தற்போது, ‘கில்லர்’ என்ற படத்தை அவர் இயக்கி, நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பனையூரில் நடந்து வந்தது. இதில் ஒரு முக்கியமான சண்டை காட்சி நடைபெற்ற போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி அவரது காலில் மோதி காயம் ஏற்பட்டது.
காலில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால், அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரை 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
