8வது சம்பள கமிஷனிடம் மத்திய அரசு ஆசிரியர்கள் வைத்த அதிரடி கோரிக்கைகள்!!

மத்திய அரசு ஆசிரியர்கள் தங்களின் ஓய்வூதியம், ஓய்வு வயது, விடுப்பு, பதவி உயர்வு மற்றும் மருத்துவ வசதிகளில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை 8வது சம்பள கமிஷனிடம் முன்வைத்துள்ளனர்.

‘ET வெல்த் ஆன்லைன்’ அறிக்கையின்படி, ஆகஸ்ட் 7ஆம் தேதி புது தில்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய NPS ஊழியர் கூட்டமைப்பு (AINPSEF) இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது. கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பல்வேறு மத்திய மற்றும் யூனியன் பிரதேசப் பள்ளிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் பணியாற்றும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம், படிகள் மற்றும் பணி நிபந்தனைகள் வழங்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, தற்போது NPS-ல் உள்ள ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மேலும், ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 14 நாட்கள் தற்செயல் விடுப்பு, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு மற்றும் 20 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆண் ஆசிரியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு, பணியில் இருக்கும்போது ரொக்கமில்லா மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி உயர்வு, புதிய ‘பாடத் தலைவர்’ பதவி, துணை முதல்வர்களுக்கான கிரேடு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related News

Latest News