இது வெள்ளியா? மல்லியா? 1 கிலோ ரூ. 4,000!! கிடுகிடுவென உயர்ந்த விலை!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.கடந்த சில தினங்களாக மல்லிகை பூவின் விலை கிலோ ஒன்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது இன்று காலை மலர் சந்தையில் திடீரென மல்லிகைப் பூவின் விலை கடும் உயர்வு காணப்பட்டு ஒரு கிலோ 4000 ரூபாய்க்கு விற்பனையாகிறது,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை திடீர் உயர்வு 1 கிலோ 1500 விற்பனை ஆகி வந்த நிலையில் திடீர் என உயர்ந்து 4000 க்கு விற்பனையாகிறது.

இதை குறித்து வியாபாரிகள் தெரிவித்தபோது, தேவை அதிகம் உள்ளதாலும் நாளை சுப முகூர்த்த தினம் என்பதாலும் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றனர், மல்லிகைப்பூ விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News