தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.92,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 173 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
