TODAY GOLD RATE : தங்கத்துடன் போட்டி போட்டும் வெள்ளி!! இன்றைய (26-09-2025) தங்கம் விலை நிலவரம்..

கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தங்கம் விலை ஒரு சவரன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதாவது ,கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,550-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதைப்போலவே வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொடுகிறது. அதாவது, இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 153 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3,000 உயர்ந்து பார் வெள்ளி 1,53,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News