உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி கருத்து தெரிவித்துள்ளார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிச்சர்ட் மோரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதின் விரும்பவில்லை என்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு புதின் முன்வருவதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவு கூறினார்.
புதின் ஏகாதிபத்திய வழிமுறையை திணிக்க முயற்சிக்கிறார் என குறிப்பிட்ட அவர், உக்ரைனில் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என்று புதின் நினைத்தார். ஆனால், அவரும் மற்றவர்களும் உக்ரைனை குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் எனவும் தெரிவித்தார்.
