சிதறப்போகும் பாகிஸ்தான் வரைபடம்!! அடி மேல் அடி வாங்கும் ஷெரீப் அரசு!

பாகிஸ்தான் இப்போது தனது வரலாற்றிலேயே மிக மோசமான ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளது. அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை விதைத்து அரசியல் செய்து வந்த பாகிஸ்தானுக்கு, இன்று அதன் உள்நாட்டிலேயே மிகப்பெரிய ஆப்பு கிடைத்துள்ளது.

ஒரு பக்கம் பலூசிஸ்தான் மாகாணம் தனி நாடாகச் சுதந்திரம் அறிவித்துவிட்ட நிலையில், இன்னொரு பக்கம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எனப்படும் பி.ஓ.கே-வில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்துள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் அடி விழுந்து வருவதால், எரிகிற வீட்டை அணைக்கத் தெரியாமல் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீயாய் பரவி வருகின்றன. போராட்டத்தை ஒடுக்க நினைத்த பாகிஸ்தான் அரசு, அந்தப் பகுதிக்குச் செல்லும் உணவு மற்றும் மருத்துவப் பொருட்களைத் தடுத்து நிறுத்தியது.

ஆனால், இது மக்கள் மத்தியில் ஆத்திரத்தை இன்னும் அதிகரித்துள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து வரும் சர்தார் அமன் கான், “பி.ஓ.கே என்பது பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல, இது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கிப் பேரணியாகச் செல்ல மக்கள் தயாராகி வருவதால், இந்திய எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததாகப் பாகிஸ்தான் இத்தனை காலம் சொல்லி வந்த காஷ்மீர், உண்மையில் பாகிஸ்தானால் தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை அங்கிருக்கும் போராட்டக்காரர்களே ஒப்புக்கொண்டுள்ளது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்தச் சிக்கல்களுக்கு இடையே, பாகிஸ்தானின் இயற்கை வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணமும் கையை விட்டுப் போயுள்ளது. பலூசிஸ்தான் இப்போது ஒரு சுதந்திர நாடு என்றும், பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பலூச் அரசியல் ஆர்வலர் மிர் யார் பலோச் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் இந்தத் தீவிர முடிவை எடுத்துள்ளனர். பாகிஸ்தானின் பரப்பளவில் மிகப்பெரிய பகுதியான பலூசிஸ்தான் பிரிந்து செல்வது, அந்த நாட்டின் பொருளாதாரத்தையே தரைமட்டமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அடக்குமுறைக்கு எதிராகப் பலூச் மக்கள் எடுத்துள்ள இந்த விஸ்வரூபம், பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உடையப் போவதற்கான ஆரம்பமாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை காலம் தீவிரவாதிகளை வளர்த்துவிட்ட பாகிஸ்தான், இன்று அதன் சொந்தப் பகுதிகளையே பாதுகாக்க முடியாமல் தள்ளாடுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தங்களுக்கு இந்தியா தான் உதவ வேண்டும் என்று கோஷமிட்டு வருவது, பாகிஸ்தான் அரசின் முகத்திரையை உலகரங்கில் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது.

ஒட்டுமொத்த பாகிஸ்தான் வரைபடமும் சிதறப் போகும் ஒரு வரலாற்றுத் தருணத்தை உலகம் இன்று கவனித்துக் கொண்டிருக்கிறது. அடக்குமுறையை மட்டுமே ஆயுதமாக ஏந்திய ஒரு நாடு, எப்படித் தானாகவே சிதையத் தொடங்கும் என்பதற்குப் பாகிஸ்தான் ஒரு நேரடி உதாரணமாக மாறியுள்ளது.

Related News

Latest News