70 வயது தாயை டைவிங் செய்ய வைத்த மகன்

70 வயதில் ஸ்கை டைவிங் செய்ய வைத்து, தாயின் கனவை நிறைவேற்றிய மகனின் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கேரளா மாநிலம் இடுக்கி கொன்னத்தடி புதியபரம்பிலை சேர்ந்த லீலா ஜோஸ் என்பவர், தனது மகனுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது லீலாவின் மகன், 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தாயை ஸ்கை டைவ் செய்ய வைத்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த வீடியோ இணையத்தில் படுவைரலான நிலையில், தனக்கு எந்த பயமும் இல்லாமல் மேகங்களுக்குள் பறந்ததாக லீலா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 70 வயதான தாயை ஸ்கை டைவிங் செய்ய வைத்து, கனவை நிறைவேற்றிய மகனின் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related News

Latest News