கர்நாடக அரசை எதிர்த்து மல்டிபிளக்ஸ் சங்கம் வழக்கு

கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடக அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டது. அதன்படி திரையரங்குகள் மற்றும் மல்ட்டி பிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட்டுகளின் விலை வரி இல்லாமல் அதிகபட்சமாக ரூ.200ஆக நிர்ணயிக்கப்படும், எனினும் 75 அல்லது அதற்கும் குறைவான இருக்கைகள் கொண்ட பிரீமியம் வசதி கொண்ட திரையரங்குகளுக்கு இந்த விலை கட்டுப்பாடு பொருந்தாது. என அறிவித்தது.

கர்நாடக அரசு வெளியிட்ட திரைப்பட டிக்கெட் கட்டணங்களை குறைக்கும் புதிய ஆணைக்கு எதிராக மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த ஆணை திரைப்பட வருமானத்தையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் என மல்டிபிளக்ஸ் சங்கம் மற்றும் சில கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News