2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை செப்டம்பர் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்றைய தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். இதையடுத்து பலர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டு பலர் அவதியடைந்துள்ளனர்.
