300 பேர் மயக்கம் : மாநாடு தொடங்கும் முன்பே பரபரப்பு

த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வரத்தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் மாநாடு நடைபெறும் பாரப்பத்தி பகுதியில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அங்கு குடிக்க தண்ணீர் இல்லாததால் தொண்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடும் வெயிலால் இதுவரை 300 பேர் மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News