Tuesday, August 5, 2025
HTML tutorial

விமான டிக்கெட் கட்டண சலுகையை அறிவித்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’

விமான டிக்கெட் கட்டண சலுகையை, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் : ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிக்கும் வகையில், புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில், ‘எக்ஸ்பிரஸ் லைட்’ திட்டம், 1,299 ரூபாயில் இருந்து துவங்குகிறது. இது உள்நாட்டு பயணத்திற்கு பொருந்தும். இதில், கூடுதல் உடைமைகளை எடுத்துச் செல்ல முடியாது.

இதே போல், ‘எக்ஸ்பிரஸ் வேல்யூ’ திட்டம் 1,499 ரூபாயில் இருந்து துவங்குகிறது. பயணியர் இந்த சலுகைகளை, ஆகஸ்ட் 7ம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை, பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மாணவர்கள் மற்றும் முதியோருக்கு விமான ‘டிக்கெட்’ கட்டணத்தில், குறிப்பிட்ட தள்ளுபடிகள் உள்ளன. இவை அனைத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. கூடுதல் விபரங்களை, ‘airindiaexpress.com’ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News