Sunday, July 20, 2025

பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம் – தவெக அதிரடி

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் விஜய் ஆரம்பித்த தவெக கட்சி அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் த.வெ.க. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பதில் அளித்து கூறியதாவது:- தமிழகத்தின் முதன்மை சக்தியான த.வெ.க. தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்குகிறார்கள். தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள்.

மதவாத சக்திகளை வீழ்த்த, விஜய் தலைமையில் சமத்துவ சக்திகளை சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் நிரந்தர எதிரியான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக்கொள்ளமாட்டோம் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news