அஞ்சல் அலுவலகங்களில் UPI வசதி : வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்

இதுவரை அஞ்சல் அலுவலகங்களில் UPI இணைப்பு இல்லாததால், டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செயல்படாமல் இருந்தது. ஆனால், கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் பாகல்கோட் பகுதிகளில் முன் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதன் பின்னர், இந்த வசதி நாடு முழுவதும் விரிவாக்கப்பட உள்ளது.

இதன் மூலம், அஞ்சல் அலுவலகங்களில் பண பரிமாற்றம் விரைவாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும்; மேலும் பணம் கையிலேயே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறையும்.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நாடு முழுவதும் இந்த வசதி அமல் பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News